Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’தி டர்ட்டி பிக்சர்ஸ்’’ படத்தில் நடித்த நடிகை மர்ம மரணம்.... சினிமாத் துறையினர், ரசிகர்கள் அதிர்ச்சி!!

Advertiesment
’’தி டர்ட்டி பிக்சர்ஸ்’’ படத்தில் நடித்த நடிகை மர்ம மரணம்.... சினிமாத் துறையினர், ரசிகர்கள் அதிர்ச்சி!!
, சனி, 12 டிசம்பர் 2020 (16:38 IST)
சில    ஆண்டுகளுக்கு முன் பாலிவுட்டில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட படம் தி டிர்ட்டி பிக்சர்ஸ்( The Dirty Picturers). இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஆர்யா பானர்ஜி. இவர் இன்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற படம் தி டர்ட்டி பிக்சர்ஸ். இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
இப்படத்தில்மலையாள கவர்ச்சி நடிகை சகீலாவாக நடித்தவர் ஆர்யா பானர்ஜி. இவரது தந்தை பிரபல சிதார் இசைக்கலைஞர் நிகில் பானர்ஜி ஆவார்.

இவர் கொல்கத்தாவிலுள்ள தனது வீட்டில் தனியார் வசித்துவந்த அவரது வீட்டிற்கு இன்று காலை பணிப்பெண் வந்து அழைப்பு மணியை அடித்துள்ளார். ஆனல் கதவு திறக்காதலால் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்,போலீஸார் கதவை உடைந்து வீட்டுக்குள் சென்று வந்து பார்த்தபோது,  ஆர்ய பானர்ஜி பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், ஆர்யா பானர்ஜி அறைவில் மதுபாட்டில்டில்களும் சில மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளதால், அவரது மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிப்பு சூப்பர் ஸ்டாருக்கு கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து!