Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற நபர் கைது !

Advertiesment
நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற நபர் கைது !
, சனி, 12 டிசம்பர் 2020 (15:52 IST)
உலகிலுள்ள உயிர்களும் நம்மைப் போலவே உயிர்வாழ நாள்தோறும் போராடி வருகின்றன. ஆனால் மனிதனின் ஆதிக்கத்தால் அவைகளை அழிப்பதும், அவைகளுக்குத் தீங்குவிளைவிப்பதும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் கேரளா மாநிலத்தில் ஒரு யானைக்கு பழத்தில் பட்டாசு வைத்துக் கொடுத்ததில் அதன் வாய்ப்பகுதி கடும் சேதமடைந்தது. கொஞ்ச நாளில் அது உயிரிழந்தது. அதேபோல் வடமாநிலத்தில் ஒரு மாட்டுக்கு வாய் சிதைந்து கொடூரமாக கொல்லப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.  குடும்ப உறுப்பினர்கள் நாய் மீது பல்வேறு புகார்கள் கூறியதால் ஆவேசம் அடைந்த கேரளாவில் வசித்துவரும் யூசுப் என்பவர் காரில் நாயைக் கட்டிம், சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலங்கு நல ஆர்வலர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே யூசுப் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகள் போராட்டத்தில் கலவரம்: எச்சரிக்கும் உளவு அமைப்பு!