பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணின் கேம் சேஞ்சர் படம் நேற்று வெளியான நிலையில், ஆட்கள் வராத தியேட்டரில் ராம்சரண் அமர்ந்திருப்பதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் கேம் சேஞ்சர். இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் தெலுங்கில் நல்ல வரவேற்பையும், தமிழில் கலவையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. நேற்று முதலாக கேம் சேஞ்சர் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் ஆட்கள் மிகவும் குறைவாக உள்ள திரையரங்கு ஒன்றில் நடிகர் ராம்சரண் தனியாக அமர்ந்திருப்பதாகவும், படம் தோல்வியடைந்ததை இது காட்டுவதாகவும் சிலர் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
ஆனால் ராம்சரண் ரசிகர்களோ அது ராம்சரணே இல்லை என்று மறுத்து வருகின்றனர். ராம்சரண் போன்ற தோற்றத்தில் ஒருவர் இருப்பதால் அதை சிலர் வீடியோ எடுத்து பதிவிட்டிருப்பதாக சிலர் சொல்கின்றனர். ஆனால் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Edit by Prasanth.K