Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிதி அளித்த ஏ.ஆர். ரகுமான்!

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (10:27 IST)
கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால், 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாமகளில் தங்கினர்.

இந்நிலையில் அமெரிக்காவின் ஓர்லான்டோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று இசை விழாக்களை நடத்தி வரும்  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அதன்மூலம் கிடைத்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஹ்மான், "அமெரிக்காவில் இசை கச்சேரி நடத்திவரும் என் சக கலைஞர்களும் நானும் சேர்ந்து கேரள மக்களுக்கு செய்யும் சிறு உதவி. இதன்மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 
 
மேலும் இத்துடன், கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பும் 1 கோடி ரூபாய்க்கான காசோலையின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷ்கின் – விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

தள்ளிப் போகிறதா அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ்!

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்கிறாரா அஜித்?

சமீபத்தில் வந்ததில் விடாமுயற்சி டிரைலர்தான் பெஸ்ட்… பாராட்டித் தள்ளிய பிரித்விராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments