Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனிதாபிமானமற்ற செயல்

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனிதாபிமானமற்ற செயல்
, புதன், 29 ஆகஸ்ட் 2018 (19:51 IST)
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு உதவிய சிறுமிக்கு அனைத்து தரப்பினரும் உதவிய நிலையில், அதே ஊரின் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிறுமிக்கு ஆறுதல் கூட கூறவில்லையே, கரூர் அருகே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் தமிழகத்தின் அண்டைய மாநிலமான, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரு சிறுமி, தனது சைக்கிள்கனவிற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தினை கேரளா மக்களுக்கு உதவிய சம்பவமும், அதே போல, மற்றொரு சிறுமி தனது இருதய அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த ஒரு குறிப்பிட்ட தொகையை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த சம்பவம் தமிழக அளவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், இருதய சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தில் ஒரு பகுதியை கேரளா மக்களின் வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்த கரூர் சிறுமிக்கு ஆங்காங்கே மட்டுமில்லாமல், தமிழகம், கர்நாடகம், கேரளா மக்கள் நன்றிகளையும், அவரது இருதய சிகிச்சை இனிதே நல்ல விதமாக நடைபெற பிரார்த்திக்கும் நேரத்தில், அந்த சிறுமிக்கு, அரசு சார்பில் எந்த வித உதவியும் செய்யாத நிலை இன்றும் தொடர்கின்றது. 
 
இந்நிலையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை பஞ்சாயத்து குமாரமங்கலம் பகுதியினை சார்ந்த அந்த சிறுமிக்கு ஆங்காங்கே புகழ் குவிந்து வரும் நிலையில், ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு அதுவும், இருதய சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தினை கொடுக்க முன்வந்த அந்த சிறுமிக்கு அரசு சார்பிலும், ஆளுகின்ற அ.தி.மு.க சார்பிலும் எந்த வித கவனிப்பும் இல்லை. 
 
இன்று காலை, அதே பகுதியில் (அதாவது சிறுமியின் ஊரில்) நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த கரூர் மாவட்டத்தினுடைய அமைச்சரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்து ரூ.25 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார். ஆனால், அந்த சிறுமியை பார்க்கவும், இல்லை, அவருக்கு எந்த வித உதவித்தொகையும் வழங்கவில்லை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆளுகின்ற ஆளுங்கட்சியான, அ.தி.மு.க வின் கரூர் மாவட்ட செயலாளரும் ஆவார், கட்சி சார்பிலும் எந்த வித நலம் விசாரிப்பும் கிடையாது. 
 
இந்நிலையில், அதே கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த முன்னாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினருமான பேங்க்.சுப்பிரமணியன், கும்பாபிஷேகத்தினை முடித்துக் கொண்டு, அந்த சிறுமியினை அந்த சிறுமி படிக்கும் பள்ளியில் சென்று பார்த்து, நிதி உதவியையும் வழங்கி, உடல்நலம் குறித்தும் கேட்டறிந்து பாராட்டினார்.
 
மேலும், அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், கருப்பண்ணசுவாமி ஆகிய கோயில் கும்பாபிஷேகங்களில் பங்கேற்ற அவர், அந்த சிறுமிக்கு நல்லவிதமாக அறுவை சிகிச்சை நடைபெறவும், நீண்ட ஆயுள் பெறவும் பிரார்த்தனையும் மேற்கொண்டார். ஆனால் ஆளுகின்ற அ.தி.மு.க வின் அமைச்சர், அதுவும், அதே கட்சியின் மாவட்ட செயலாளருமான, தமிழகபோக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நமது மாவட்டத்தினை சார்ந்த ஒரு பள்ளி சிறுமி, இவ்வாறு பணியாற்றியதற்கு பாராட்டும் தெரிவிக்காமல், அட்லீஸ்ட் ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது ஒரு வாழ்த்தும், உடல்நலம் விசாரிக்காமல் சென்றது அந்த பகுதி மக்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களையும், சமூக நல ஆர்வலர்களையும் சிந்திக்க வைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கோரிக்கை