Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எளிய நடிகனை நியமித்ததற்கு நன்றி… நடிகர் நாசர் நெகிழ்ச்சி

Advertiesment
nasar kameela
, திங்கள், 30 மே 2022 (19:50 IST)
தமிழ் சினிமாவில் வாழ் நாள் சாதனையாளர்களுக்கு' கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது 'வழங்கப்படும் என தமிழ் நாடு அரசு அறிவித்தது.

இந்தக் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கும்  தேர்வுக் குழுவில்  எஸ்பி.முத்துராமனுடன்,  நாசர், கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்படும்.

இந்த விருது வரும் ஜூன் மாதம் கருணா நிதியின் பிறந்த தினமான 3 ஆம் தேதி  முதல்வர் ஸ்டாலின் வழங்க  உள்ளார்.  இவ்விருது இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், நடிகர் நாசர் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், பேரன்பிற்கும் மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தாங்கள் ஆற்றிவரும்  நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும், சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்ல அதன் மூலம் மக்களிடயே ஒரு பேரெழுச்சியை கொண்டு வரக் காரணமாக இருந்த வித்து, டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் கலைஞர் கலைத்துறை வித்தகம் விருது மற்றும் ரூ.10 லட்சம் பொன்முடிப்பும் வழங்கப்பட்ம் என அறிவித்த தங்ககளுகு நன்றிகள் பல கோடி.

இந்த விருதினைப் பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்ததற்கும் அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும நியமித்ததற்கு நன்றி,  கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தறிழறிஞர் ஆசியுடன் செவ்வனே செய்வேன் என உறுதி கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இசை நிகழ்ச்சியில் படிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்