பாலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் கங்கனா ரனாவத் தமிழில் சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் மூலம் பிரபலமனார்.
இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றவர். ஆனால் வாயைத் திறந்தாலே சர்ச்சைதான். பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகளின் தீவிர ஆதரவாளரான இவர் காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வது வாடிக்கை. அதுபோலவே பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவர் குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவ்வப்போது வைத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்த தாக்கட் என்ற திரைப்படம் ரிலீஸானது. பல கோடி ரூபாய் முதலீட்டில் வெளியான இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் ரிலீஸாகி 8 ஆவது நாளான நேற்று வெறும் 20 டிக்கெட்கள் மற்றுமே விற்பனை ஆகியுள்ளதாகவும், இன்றைய வசூல் சுமார் 4420 ரூபாய்தான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கருத்துகளில் கங்கனா அனைவராலும் வெறுக்கப்பட்டாலும், அவரின் நடிப்புத்திறமைக்காக பரவலாக ரசிகர்களைப் பெற்றிருந்தார். ஆனால் அவரின் படம் ஒன்று இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்திருப்பது பரபரப்பாக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரனாவத் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
இப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறாக இன்றி, அப்போது இருனந்த எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரு திரைப்படமாக அவர் உருவாக்கத் திட்டமிட்டடுள்ளார்.
இப்படத்திற்கு எமர்ஜென்சி என பெயரிட்டுள்ளார். மேலும், இப்படத்தின் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.