Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் ரிலீஸாகும் ’தங்கலான்’, ’டிமாண்டி காலனி 2’: தேதி அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (10:02 IST)
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ மற்றும் அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி 2’ ஆகிய இரு படங்கள் ரிலீசான நிலையில், இந்த இரு படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில், இந்த படம் ஹிந்தியில் வெளியானது, மற்றும் வசூலை வாரி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அதேபோல், பொதுவாக இரண்டாம் பாகம் தமிழில் வெற்றி பெறாது என்ற சென்டிமென்ட் இருக்கும் நிலையில், ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்து, சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், மேற்கண்ட இரண்டு படங்களையும் திரையரங்குகளில் பார்க்காதவர்கள் ஓடிடி ரிலீசுக்காக காத்திருந்த நிலையில், தற்போது இந்த படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
‘தங்கலான்’ திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டும் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

சௌந்தர்யா விபத்தில் சாகலை.. இந்த நடிகர்தான் கொலை செய்தாரா?? - 20 ஆண்டுகள் கழித்து அதிர்ச்சி புகார்!

க்யூட் லுக்கில் கலக்கும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அந்த கண்ண பாத்தாக்கா… கூல் லுக்கில் வாணி போஜன்!

அடுத்த கட்டுரையில்
Show comments