கோட் படத்தின் ‘விசில் போடு’ வீடியோ பாடல் இணையத்தில் ரிலீஸ்!

vinoth
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (09:49 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான GOAT திரைப்படம் செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் கோட் திரைப்படம் உருவானது.

ரிலீஸுக்குப் பின்னர் படம் கலவையான விமர்சனங்களைப் பெற தொடங்கியது. ஆனாலும் வசூலில் குறை வைக்கவில்லை.. படம் இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அஜித், ரஜினி, சூர்யா மற்றும் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் ரெஃப்ரன்ஸ்களை அமைத்திருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. அதுபோல சிவகார்த்திகேயன் மற்றும் த்ரிஷா போன்றோரின் கேமியோக்களும் ரசிகர்களை கவர்ந்தன.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த விசில் போடு பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் முதலில் வெளியான போது நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டது. அதன் பின்னர் தியேட்டரில் வெளியாகும் அதில சில மாற்றங்களைப் படக்குழு செய்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments