Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘லெஜண்ட்’ சரவணன் படத்தில் இணைந்த ஆண்ட்ரியா & ஷாம்!

‘லெஜண்ட்’ சரவணன் படத்தில் இணைந்த ஆண்ட்ரியா & ஷாம்!

vinoth

, திங்கள், 16 செப்டம்பர் 2024 (08:16 IST)
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் வெளியாகி கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. அதே போல எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது.

இதையடுத்து அவர் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்ன்ர் ரிலீஸான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்த படம் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

தற்போது லெஜண்ட் சரவணனின் அடுத்த பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. சென்னையில் நடந்த ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது தூத்துக்குடியில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்த படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சரவணன் “இந்த படம் தூத்துக்குடி துறைமுகத்தை மையப்படுத்திய ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா மற்றும் ஷாம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஹீரோயினாக பாயல் ராஜ்புத் நடிக்கிறார். படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!