Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கோட்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. விஜய் ரசிகர்கள் குஷி..!

Mahendran
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (11:04 IST)
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை Netflix நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை மறுநாள், அதாவது அக்டோபர் 3ஆம் தேதி, Netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஒரு புதிய திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கோட் திரைப்படம், நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திரையரங்குகளைப் போலவே ஓடிடியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து Netflix தனது சமூக வலைதளத்தில், அக்டோபர் 3ஆம் தேதி சிங்கம் கிளம்பி வருகிறது என்றும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஸ் ஜே சூர்யாவுடன் மோதும் கார்த்தி… சர்தார் 2 படத்துக்காக பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சி…!

கூலி படத்தில் சர்ப்ரைஸாக இணைந்த பிரபல நடிகை… செம்ம குத்தாட்ட பாடலுக்கு நடனம்!

ஜனநாயகன் படத்தில் இருந்து விலகிய பிரபலம்… காரணம் இதுதான்!

குட் நியூஸ் ஆன் தி வே… ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் விநியோகஸ்தர் கொடுத்த அப்டேட்!

இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ்… தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments