Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாட்டா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

Advertiesment
டாட்டா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

J.Durai

, சனி, 28 செப்டம்பர் 2024 (09:46 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கூத்தனபள்ளி கிராமத்தில் டாடா தொழிற்சாலை இயங்கி வருகிறது. செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் எந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென கெமிக்கல் பிளான்ட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
இந்த விபத்தில் தொழிற்சாலையில் உள்ள கெமிக்கல் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தீயில் எறிந்து நாசமானது. தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு வாகனம் மற்றும் ராயக்கோட்டை தேன்கனி கோட்டை தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்புத் துணையினர் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தீ விபத்தால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. 
 
இது குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!