Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் நிவாரண நிதியாக தயாரிப்பாளர் தாணு கொடுத்த தொகை!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (08:16 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிரபல தயாரிப்பாளர் தாணு அவர்கள் ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;
 
பெருந்தொற்று காலத்தில் ஆட்சியில் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவும், ஓய்வில்லா களப்பணியும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
 
தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலைநோக்குப் பார்வையும், பெருந்தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விளிம்பு நிலை மக்களுக்கு நீங்கள் படைத்த பசியாற்றும் திட்டங்கள் உங்களையும், சந்ததிகளையும் தேகபலம், மனோபலத்துடன் நீண்ட ஆயுளை அளித்து தரும்.
 
உங்கள் தர்ம சிந்தனைக்கு, சினிமா தொழில் சிதைந்து நிற்கும் சூழலில் எனது சிறிய பங்களிப்பாக ரூபாய் 10 லட்சத்துக்கான வரைவோலையை இணைத்து உள்ளேன். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்து நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments