Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருநங்கை கேரக்டரில் நடிக்கும் முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென்!

Advertiesment
susmita
, வெள்ளி, 7 அக்டோபர் 2022 (16:43 IST)
திருநங்கை கேரக்டரில் நடிக்கும் முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென்!
முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென் திருநங்கை கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
நாகார்ஜுனா நடித்த தமிழ் திரைப்படமான ’ரட்சகன்’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். இவர் ஷங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் 
 
இந்த நிலையில் 46 வயதாகும் சுஷ்மிதாசென் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’ஆர்யா’ உள்பட ஒருசில வெப் தொடர்களில் நடித்து வரும் சுஷ்மிதா ’தாலி’ என்ற வெப் தொடரில் திருநங்கை கேரக்டரில் நடிக்கிறார் 
 
இந்தத் தொடரை ரவி யாதவ் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள நிலையில் திருநங்கை கேரக்டரில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் அந்த கேரக்டரில் நான் முழு ஈடுபாட்டுடன் நடிப்பேன் என்றும் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.
 

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் வார்த்தையைக் கேட்காமல் தாணு செய்த செயல்…. நானே வருவேன் ப்ரமோஷனில் கலந்துகொள்ளாத காரணம்!