Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குற்றவாளிகள் நீதி முன் நிறுத்தப்படுவார்கள்… ரெய்னாவின் இழப்புக்கு ஆறுதல் கூறிய தமிழ் நடிகர்!

Advertiesment
குற்றவாளிகள் நீதி முன் நிறுத்தப்படுவார்கள்… ரெய்னாவின் இழப்புக்கு ஆறுதல் கூறிய தமிழ் நடிகர்!
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:57 IST)
இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சுரேஷ் ரெயனாவின் உறவினர் ஒருவர் கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் சூர்யா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரை தல தோனி என்றால் தளப்தி ரெய்னாதான். தோனியின் ஓய்வுக்குப் பின் அணியை வழிநடத்த போவதே அவர்தான் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் , துபாயில் பயிற்சிக்காக சென்றிருந்த ரெய்னா திடீரென இந்தியா கிளம்பி வந்தார். இதற்குக் காரணமாக இந்தியாவில் உள்ள அவரது மாமா ஒருவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரெய்னாவுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ‘இந்த கஷ்டமான காலத்தில் உங்கள் துயரத்தில் தோல் கொடுத்து பங்கேற்றுக் கொள்கிறோம். குற்றவாளிகள் நீதி முன் நிறுத்தப்பட வேண்டும். உங்கள் மன அமைதிக்கும், உறுதிக்கும் என் பிராத்தனைகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடர்ந்த தாடி... மீசைன்னு வைரலாகும் வில்லத்தமான சந்தானம்