சூர்யா 45 படத்தின் டீசர் & டைட்டில் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

vinoth
ஞாயிறு, 15 ஜூன் 2025 (11:17 IST)
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். மிகக் குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.

படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். இதுவரை இந்த படத்தின் ‘தலைப்பு’ அறிவிக்கப் படாமல் உள்ளது.

இந்நிலையில் ஜூன் 20 ஆம் தேதி இயக்குனர் ஆர் ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அறிமுக டீசர் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த டீசரோடு படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. முதலில் இந்த படத்துக்கு ‘வேட்டைக் கருப்பு’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. தற்போது ‘கருப்பு’ என்று மட்டும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments