Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி ஒரு அற்புதமான பாடலை கொடுத்ததற்கு நன்றி - ஜிவியை பாராட்டிய சூர்யா!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (18:10 IST)
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. spicejet boeing 737 ரக விமானத்தில் பறந்தபடியே வெய்யோன் சிலை பாடலை வெளியிட்டனர்.

அண்மையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரைப் போற்று படத்தின் " காட்டு பயலே" பாடலை படக்குழு வெளியிட்டிருந்தனர்.  ஜி.வி பிரகாஷின் வித்யாசமான இந்த பாடல் அனைவரையும் ஈர்த்து சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. இந்நிலையில் இது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் " ஒவ்வொரு முறையும் உங்கள் இசையில் புதிதாக கண்டுபிடிப்பதை பார்த்து ஈர்க்கப்பட்டிருக்கிறேன். சூரரைப் போற்று பாடல்கள் கூடுதல் சிறப்பானதற்கு நீங்கள் தான் காரணம் என்று  ஜி.வி பிரகாஷைபாராட்டியுள்ளார்.  இதற்கு ஜிவி இன்னும் நிறைய வர உள்ளது சார் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். "காட்டு பயலே" பாடல் தற்ப்போது வரை 6.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments