Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீரா மிதுன் & சூர்யா சர்ச்சையில் உள்ளே புகுந்த அரசியல் கட்சி தொண்டர்கள்!

Advertiesment
மீரா மிதுன் & சூர்யா சர்ச்சையில் உள்ளே புகுந்த அரசியல் கட்சி தொண்டர்கள்!
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (10:07 IST)
சமீபத்தில் நடிகையும் மாடலுமான மீரா மிதுன் நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது எனக் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியது.

நடிகை மீரா மிதுன் நடித்த சில படங்களுக்காக அவர் எப்போதும் பேசப்பட்டதே இல்லை. ஏதேனும் சர்ச்சைகளை இழுத்துக் கொண்டு வந்து அவ்வப்போது சமுகவலைதளங்களில் நடக்கும் விவாதங்களில் மையப்புள்ளியாக இருப்பார். அந்த வகையில் அவர் இப்போது கைவைத்திருப்பது நடிகர் சூர்யாவை. சூர்யாவோடு தானா சேந்த கூட்டம் படத்தில் ஒரு துக்கடா கதாபாத்திரத்தில் நடித்தார் மீரா. ஆனால் அந்த படத்தில் தன் காட்சிகளை ஒரே டேக்கில் நடித்து முடித்ததாகவும் சூர்யா எல்லாக் காட்சிகளையும் 10 முறைக்கும் மேல் நடித்ததாகவும், அவருக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது எனவும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

இதனால் கோபமடைந்த பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக மீரா மிதுனை கலாய்க்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அவரை ஆபாசமாக சமூகவலைதளங்களில் வசைபாடவும் ஆரம்பித்தனர். இதில் பலரும் சூர்யா ரசிகர் என்ற அடையாளத்தோடு காணப்பட்டனர். இதையடுத்து சூர்யா ரசிகர்கள் ஆபாசமாகப் பேசுகின்றனர் என புலம்ப ஆரம்பித்தார் மீரா.

ஆனால் அப்படி வசைபாடியவர்களில் பலரும் சூர்யா ரசிகர்கள் அல்ல என்பதும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. நடிகர் சூர்யா குடும்பத்தினர் தங்கள் அரசியல் கருத்துகளுக்காக தொடர்ந்து ஒரு கட்சியால் அவதூறு செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சூர்யாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக இப்படி அநாகரீக செயல்களில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ்-4ல் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழு விவரம் இதோ!