Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா 44 ஷூட்டிங் ஓவர்… முழுக் கவனமும் கங்குவா மேலதான்… ஆடியோ ரிலீஸ் எப்போது?

vinoth
திங்கள், 7 அக்டோபர் 2024 (14:48 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ரிலீஸாகி இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்க ஆரம்பித்த ‘சூர்யா 44’ படத்தின் ஷூட்டிங்கே நேற்று முடிந்துவிட்டது. இந்நிலையில் இனிமேல் ஒரு மாதம் முழுவதும் சூர்யா கங்குவா படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் ஆடியோ ரிலீஸ் அக்டோபர் 20 ஆம் தேதி நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம்: ஹீரோ அறிவிப்பு..!

என்னை ஏமாற்றியதற்கு நன்றி! மஞ்சள் வீரன் டிடிஎஃப் வெளியிட்ட ஆதங்க வீடியோ!

பிக்பாஸ் வீட்டை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்..

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!

நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் அந்தமானில் நடைபெற்ற ஹார்லி-டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது!

அடுத்த கட்டுரையில்
Show comments