Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

vinoth

, ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (07:27 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்றார் இயக்குனர் மணிரத்னம். இதையடுத்து அவர் இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் அடுத்த ஆண்டு ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் தளபதி படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் அறிவிப்பு ரஜினிகாந்த் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!