Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் ரி ரிலீஸ் ஆகும் சூர்யா முருகதாஸின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

vinoth
புதன், 29 மே 2024 (09:05 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் அதிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா காம்பினேஷனில் இந்த படம் உருவானது. படம் வெளியான போது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. குறிப்பாக சூர்யா, அசின் ஜோடியின் காதல் காட்சிகளும் படத்தின் பாடல்களும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டன.

கஜினி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டது. பாலிவுட்டில் முதல் முதலில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற சாதனையை கஜினி நிகழ்த்தியது.

இந்நிலையில் இப்போது பழைய ஹிட் படங்களை ரி ரிலீஸ் செய்யும் போக்கு அதிகமாகியுள்ள நிலையில் கஜினி படத்தை கேரளாவில் ஜூன் 7 ஆம் தேதி ரி ரிலீஸ் செய்ய உள்ளனர்.  அதே நாளில் தமிழில் இந்தியன்  திரைப்படம் ரி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'ஜவான்’ படத்திற்கு பாதிக்கு மேல் இசையமைத்தவர் சாய் அபயங்கரா? அட்லி தேர்வின் ரகசியம்..!

அமாவாசையை பிக்ஸ் செய்த வெற்றிமாறன்.. என்ன தான் புரட்சியாளராக இருந்தாலும் செண்டிமெண்ட் உண்டு..!

கூலி - ஜனநாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்.. இஷ்டத்திற்கு அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்.. ரஜினி, விஜய்யை அடுத்து அஜித்துடனா? மாஸ் தகவல்..!

சின்னத்திரை நடிகை மீது மான நஷ்ட வழக்கு: தொழிலதிபர் அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments