Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்சார் போர்ட் எதிர்ப்பால் தலைப்பு மாறும் ‘வடக்கன்’ படம்!

vinoth
புதன், 29 மே 2024 (08:58 IST)
எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி முதல் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். எம்டன் மகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி, பல சின்னத்திரை சீரியல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த படத்தை டிஸ்கவரி சினிமாஸ் மூலமாக புத்தக பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்கிறார்.

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள வடக்கன் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களைப் பற்றிய படமாக வடக்கன் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த படம் மே மாதம் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் போர்டில் படத்தின் தலைப்புக்கு எழுந்த எதிர்ப்பால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இப்போது படத்துக்கு ரயில் என்று பெயரை மாற்றியுள்ளனர். மேலும் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் பாஸ்கர் சக்தி “இது பிரிவினையைப் பற்றி பேசுற படம் இல்லை. ஆனால் சென்சார் போர்ட் அப்படி நினைக்குறாங்க. ஒரு தலைப்பை படத்தோட கதையோட பொறுத்திப் பார்க்காம, இப்படி தனியா பிரிச்சு பாக்குறது சரியில்லை” என வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது: ஜோதிகா கொந்தளிப்பு!

ராமாயணம், மஹாபாரதம் எடுத்தது போதும்..! தசவதாரத்தை கையில் எடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!

பிக்பாஸ் வீட்டில் இன்று எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் இவரா?

திரைப்படங்களுக்கு புதிய சான்றிதழ் முறை: மத்திய திரைப்பட தணிக்கை குழு அறிமுகம்..!

AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments