Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையை மறித்து பட்டாசு வெடித்த சூர்யா ரசிகர்கள்… கங்குவா ரிலீஸை ஒட்டி எல்லை மீறிய கொண்டாட்டம்!

vinoth
வியாழன், 14 நவம்பர் 2024 (09:47 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸாகிறது. இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த படத்துக்காக சூர்யா இந்தியா முழுவதும் பல நகரங்களுக்கு சென்று ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இன்று படம் ரிலீஸாவதை ஒட்டி சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி திரையரங்குக்கு வெளிப்புறம் சாலையில் போக்குவரத்தை பாதிக்கௌம் விதமாக ரோட்டில் பட்டாசுகளை வெடித்து சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments