Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளீயீடு!

Advertiesment
rajinikanath
, திங்கள், 12 டிசம்பர் 2022 (22:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 வது பிறந்த நாளையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறிய   நிலையில், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய ஆளுநர் திரு. ரவி அவர்களுக்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிச்சமி, திரு 0. பன்னீர் செல்வம், திரு. அண்ணாமலை, திரு.T.K. ரங்கராஜன், திரு. வைக்கோ, திரு. அன்புமணி ராமதாஸ், திரு. G.K. வாசன், திரு. திருநாவுக்கரசு, திரு. A. C. ஷண்முகம், திரு. தொல் திருமாளவன், திரு. சீமான் அவர்களுக்கும், மத்திய, மாநில முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள், அதிகாரிகள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் திரு. கமலஹாசன், திரு. இளையராஜா, திரு. வைரமுத்து, திரு. ஷாருக்கான், திரு. அக்ஷய் குமார், திரு. மோகன்லால், திரு. மம்மூட்டி, திரு. சிவராஜ்குமார், திரு. சரத்குமார், திரு. உதயநிதி ஸ்டாலின், திரு. தனுஷ், திரு சிவகார்த்திகேயன் மற்றும் திரையுலகத்தை சார்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...
 

ALSO READ: ரஜினியின் பிறந்த நாள் பரிசாக ''ஜெயிலர் ''பட வீடியோ ரிலீஸ்!
 
விளையாட்டு மற்றும் பல துறைகளிலிருந்து எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த திரு. சச்சின் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பொது மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.''என்று தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிவு பட புதிய போஸ்டர் ரிலீஸ்