Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவ்ளோவ் தான் கொடுக்க முடியும்... அண்ணாத்த படத்தில் நயன்தாராவின் சம்பளத்தை குறைத்த சன் பிச்சர்ஸ்?

Advertiesment
இவ்ளோவ் தான் கொடுக்க முடியும்... அண்ணாத்த படத்தில் நயன்தாராவின் சம்பளத்தை குறைத்த சன் பிச்சர்ஸ்?
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (11:41 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கிடையில் அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் டைட்டில் "அண்ணாத்த" என்று cast and crew குறித்த தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவுள்ள நயன்தாராவின் சம்பளத்தை சன் பிச்சர் நிறுவனம் குறைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ரூ. 4.5 கோடி  சம்பளம் தரப்பட்டுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். முன்னனி நடிகையாக இருந்தும் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்னவாக இருக்கும் என கோலிவுட்டில் பலரும் யூகித்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைதியான போலீஸ் - கைதி இந்தி ரீமேக்கில் சிங்கம் ஸ்டார்!