Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலிவான அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல – ரஜினியின் கருத்துக்கு பாஜக பதில் !

Advertiesment
மலிவான அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல – ரஜினியின் கருத்துக்கு பாஜக பதில் !
, வியாழன், 27 பிப்ரவரி 2020 (09:51 IST)
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான கலவரத்தை ஒடுக்குவதில் மத்திய அரசு தோற்றுவிட்டதாக கருத்து தெரிவித்த ரஜினிக்க்கு தமிழக பாஜக பதில் அளித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது எதிர்பாராத வகையில் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தார். டெல்லி வன்முறைக்கு மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வி தான் காரணம் என்றும் ஆரம்பத்திலேயே இந்த கலவரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கலாம் என்றும், மத்திய அரசின் கவனக்குறைவால்தான் இந்த கலவரம் பெரிதாகி உள்ளது என்றும் கூறினார் .

மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் அவ்வாறு மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை கடுமையாக கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசை இதுவரை நேரடியாக ரஜினி விமர்சனம் செய்யாத நிலையில் திடீரென அவர் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக மாநில பொருளாளர் ஆர் எஸ் சேகர் ‘உளவுத்துறை தோல்வி என சொல்வது ரஜினியின் அறியாமை. மேலும் மற்றவர்களை போல மலிவான அரசியல் செய்வது ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல’ எனவும் சொல்லியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!