ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கேரளாவில் நேற்று துவங்கியது.
வரலாற்று சிறப்புமிக்க "பாகுபலி" படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து உலகம் முழுவதும் மிகப்பெரும் சாதனையை படைத்தது. அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாக்களிலும் தொடர்ந்து சரித்திர படங்களை பிரமாண்டமாக தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதற்கு எடுத்துகாட்டக்காக, தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா ஜோடியுடன் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிக்கும் ‘சைரா’ படம் உருவாகி வருகிறது. இது தவிர மகாபாரத கதை மலையாளம், இந்தியில் ரூ.1000 கோடி செலவில் தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ பிரமாண்டமாக படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விக்ரம் நடிப்பில் ‘மகாவீர் கர்ணா’ என்ற பிரம்மாண்ட படமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் பூஜையுடன் நேற்று துவங்கியுள்ளது. இந்த பூஜையில் படக்குழுவினருடன் பிரபல நடிகர் சுரேஷ் கோபியும் , உன்னி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
விரைவில் இதன் படபிடிப்பைத் தொடங்கி, அடுத்தாண்டு டிசம்பரில் மஹாவீர் கர்ணா திரைப்படத்தை திரையிட இருக்கிறார்கள் படக்குழுவினர்.
அதோடு இந்தப் படத்திற்கு சர்வதேச தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு விஎ ஃப்எக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.