Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கஜா புயல்: நடிகர் விக்ரம் ரூ,25லட்சம் நிதியுதவி

Advertiesment
கஜா புயல்: நடிகர் விக்ரம் ரூ,25லட்சம் நிதியுதவி
, புதன், 21 நவம்பர் 2018 (10:45 IST)
சியான் விக்ரம் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்காக ரூ,25 லட்சத்தை வழங்குவதாக அறிவித்துளளார்.
 
கஜா புயல் கடந்த 15ம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, வேதாரண்யம், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில்  கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  புயல் பாதித்த பல இடங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட வழியில்லாமல் அல்லல்படுகிறார்கள். 
 
இதனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.  குறிப்பாக, அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், தன்னார்வ அமைப்பினர்  பெரிய அளவில் உதவிசெய்துவருகின்றனர். 
 
ரஜினி, விஜய் ஆகியோர் தங்களது ரசிகர் மன்றத்தின் வாயிலாக  உதவிகளை செய்து வருகிறார்கள். நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ரூ.50லட்சம் வழங்கினர். லைகா நிறுவனம் ரூ.1 கோடியே ஒருலட்சம்  நிதியுதவியை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம்  ரூ.25லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொப்புளை காட்டச் சொன்னார்கள்: பிரபல நடிகை பரபரப்பு பேட்டி