Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘அமரன்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம்.. ரிலீசுக்கு பின் நீளம் குறைக்கப்படுமா?

Siva
வியாழன், 24 அக்டோபர் 2024 (18:31 IST)
சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற்றதுடன், அதன் ரன்னிங் டைம் தகவல் வெளியாகியுள்ளது. 
 
‘அமரன்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியிடப்பட உள்ளதாக இருந்தாலும், டிரைலர் வெளியானவுடன் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
 
இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வீர வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘அமரன்’ திரைப்படம், தேசப்பற்றை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளதால், இது பார்வையாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
 
சென்சார் குழுவின் பார்வைக்கு பிறகு, ‘அமரன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் ரன்னிங் டைம் 168 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஆகும். படம் மூன்று மணி நேரத்திற்கு நெருங்கியுள்ள நிலையில் ரிலீசுக்கு பின் நீளம் குறைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவரவுள்ள இந்த படம், சிவகார்த்திகேயனின் முதல் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.
 
இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.  முக்கிய கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், சாய் ஒளிப்பதிவில், கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் படத்தில் மணிகண்டன்.. ‘வடசென்னை 2’ பற்றி பரவும் வதந்தி!

ராஜமௌலி படத்தில் இணைந்த பிரித்விராஜ்… துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments