Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமரன் படத்தின் டிரைலர் வெளியீடு எப்போது? வெளியான அறிவிப்பு!

அமரன் படத்தின் டிரைலர் வெளியீடு எப்போது? வெளியான அறிவிப்பு!

vinoth

, செவ்வாய், 22 அக்டோபர் 2024 (14:25 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று சொல்லப்படுகிறது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. தற்போது படத்தின் ப்ரமோஷன் பணிகள் பல மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 45 படத்தில் நடிக்கும் இரண்டு முன்னணி நடிகைகள்… டைட்டில் இதுவா?