Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமரன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிய ராஜ்குமார் பெரியசாமி!

அமரன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிய ராஜ்குமார் பெரியசாமி!

vinoth

, ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (07:35 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று சொல்லப்படுகிறது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசரில் இருந்து இது காஷ்மீர் தீவிரவாதிகளின் கதை என்றும் காஷ்மீரில் உள்ள அப்பாவி பொதுமக்களை இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மேல் நம்பிக்கை எழுந்துள்ளதால் அவரை வைத்து படம் இயக்க கலைப்புலி எஸ் தாணு மற்றும் மதுரை அன்புச்செழியன் ஆகியோர் முன்பணம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னுடைய அடுத்த படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்த சிம்பு… ரசிகர்கள் குஷி!