சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் சில மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்ற்து. அப்போது சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் “இந்த படத்தில் நான் பூஜ்ய ரூபாய் சம்பளத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள் காரணமாக” எனக் கூறியுள்ளார்.
இந்த படத்தை முதலில் 24 ஏ எம் ஆர் டி ராஜா தயாரித்த நிலையில் பின்னர் அதை கே ஜே ஆர் ராஜேஷ் கைப்பற்றி தயாரித்தார். சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் ப்ளாப்பால் இந்த படம் முடிவதில் பல சிக்கல்கள் எழுந்தன. இப்போது ஒருவழியாக எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.