சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவர், நடிப்பில், நேற்று இன்று நாளை படத்தை இயக்கியிருந்த ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான்.
இந்த நிலையில், அயலான் பட டீசர் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்து, ஏ.ஆர்.ரஹ்மான். நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் ஸ்டியோவில் இதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று சன்டிவியின் யூடியூப் பக்கத்தில் அயலான் பட டீசர் ரிலீஸாகியுள்ளது.
வேற்று கிரகவாசி பூமிக்கு வருவதன் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், விஎஃஎக்ஸ்ஸுக்கு படக்குழு அதிகம் மெனக்கெட்டு, சயின்ஸ் பிக்சன் படமாக இதை உருவாக்கியுள்ளனர்.
இந்த டீசர் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.