Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழில் இருந்து மலையாளம் சென்று கலக்கும் சிறுத்தை சிவா தம்பி பாலா...

Advertiesment
தமிழில் இருந்து மலையாளம் சென்று கலக்கும் சிறுத்தை சிவா தம்பி பாலா...

J.Durai

, வெள்ளி, 19 ஜூலை 2024 (14:06 IST)
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம்,தம்பி, அண்ணாத்த  படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. 
 
இவர் மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி, மோகன் லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 
 
மலையாளத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளவர்.
 
சில நாட்களாகச் சந்தித்து வந்த,தன் உடல் நிலை பிரச்சினைகளில் இருந்து  முற்றிலும் விடுபட்டு மீண்டு விட்டார். 
 
ஓராண்டு காலத்திற்குப் பிறகு தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.மீண்டும் படங்களில் நடிப்பதற்காகக் கதை கேட்கத் தொடங்கி விட்டார்.
 
அப்படிக் கேட்டதில் ஒரு நல்ல கதை அமைந்து இருக்கிறது.
விரைவில் நடிக்கவும் உள்ளார்.
 
தமிழில் புகழ்பெற்ற இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி இவர் என்பதால் தமிழிலும் பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அடுத்து நடிக்க இருக்கும் மலையாளம் மற்றும் தமிழ்ப் பட விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகினி உடையில் பீச் போட்டோஷூட் நடத்திய கீர்த்தி பாண்டியன்!