Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராட்டுகளால் சேட்டிலைட் மற்றும் ஓடிடியில் பெரிய தொகைக்கு விலைபோன சித்தா!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (10:33 IST)
பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அருண்குமார் அடுத்தடுத்து விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி மற்றும் சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் பாராட்டுகளையும் வசூலையும் குவித்துள்ளது.

சித்தா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 30  கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. நல்ல படம் என்ற வாய்வழி விமர்சனங்கள் வழியாகவே இந்த படத்துக்கு விளம்பரம் கிடைத்து இப்போது பிக்கப் ஆகியுள்ளது.

ரிலீஸுக்கு முன்னர் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி வியாபாரம் நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் விஜய் டிவி சேட்டிலைட் உரிமையையும், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஓடிடி உரிமையையும் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஆயுத பூஜையை முன்னிட்டு ஓடிடியில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments