தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபல ஜவுளி கடை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டியெடுத்தனர். அதற்கு அவர் கூறியதாவது:
சாரி தான் உலகத்தில் அழகானது.  நான் மாடல் உடைகளும் அணிவேன், ஆனால், பட்டு சேலை கட்டினால் பாசிட்டிவாக உணர்வேன் என்று கூறினார். இந்த சேலையை அப்பா கிப்ட் பண்ணியிருக்கிறார்.என்று கூறினார்.
 
									
										
			        							
								
																	தமிழ் சினிமாவில் நீங்கள் நடிக்கவில்லையே என்று செய்தியாளர்  கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர்  நான் தமிழ் பொண்ணுதான் என்று விரைவில் நடிப்பேன். தமிழில் ஆல்பம் வெளியாகவுள்ளது. நான் பெரிய பட்ஜெட் சின்ன பட்ஜெட் பற்றி பார்க்கவில்லை…..
 
									
											
									
			        							
								
																	எல்லா துறைகளிலும் கமல்ஹாசன் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.
 
									
			                     
							
							
			        							
								
																	அதற்கு அவர், அப்பாவுடன் போட்டி யாராலும் வைக்க முடியாது. நான் என்னுடைய அளவுக்கு வைக்கிறேன்… என்று கூறினார்.
 
									
			                     
							
							
			        							
								
																	மேலும், நான் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இப்படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர் நடித்தவர்கள் எல்லோரும் பெண்கள்  என்று கூறியுள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	 நடிகர் தனுஷுடன் இணைந்து மீண்டும் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஆம், நடிகர் தனுஷ், விஜய், அஜித் ஆகியோருடன் இணைந்து நான் நாடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.