Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சல்மான் கானின் 'டைகர் 3' பட டிரைலர் ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்

tiger 3
, திங்கள், 16 அக்டோபர் 2023 (13:29 IST)
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் இந்தியாவில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவும்.
 

அந்த வகையில், சல்மான் கான், கத்ரினா கைப் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ஏக் தா டைகர். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிண்டா ஹாய் என்ற படம் வெளியானது.

தற்போது சல்மான் கான், இம்ரான் ஹாஸ்மி, கத்ரினா கைப் ஆகியோர் நடிப்பில் டைகர் 3 படம் உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கத்தில், ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  டைகர் 3 பட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.  அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ள இப்படத்தின் டிரைலர்  ரசிகர்களின்  வரவேற்பை பெற்று,  இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.699க்கு 10 படம் பார்க்கலாம்.. பிவிஆர் மல்டிபிளக்ஸ் சூப்பர் ஆஃபர்..!