Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாடகர் எஸ்.பி.பி 90 % மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார் !

Advertiesment
பாடகர் எஸ்.பி.பி  90 % மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார் !
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (21:02 IST)
சினிமா பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்காக பிரார்த்திக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் பெற வேண்டும் என திரை பிரபலங்கள் பலரும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் எஸ்பிபிக்காக பிரார்த்தனை செய்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டி இன்று மாலை கூட்டு பிரார்த்தனை செய்ய நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். ரஜினிகாந்தை தொடர்ந்து கலைப்புலி தாணு உள்ளிட்ட பலரும் கூட்டு பிரார்த்தனைக்காக அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி சரண்,அப்பாவின் உடல் நலத்துக்காகவும் சிகிச்சைக்காகவும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி

இருப்பினும் ரசிகர்களின் வேண்டுதலே அவரை மீட்கும் என நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்திருந்தார்.

இன்று எஸ்.பி.பி. சரண், பாடகர் எஸ்.பி.பி  90 சதவீதம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையால் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனது நண்பன் இதுதான் ! 300 கிமீ பைக்கில் சென்ற முன்னணி நடிகை