Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கையின் குழந்தையுடன் சிம்பு! முதன்முறையாக வெளியிட்ட கியூட் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (11:40 IST)
தமிழ் சினிமாவின் ஆல் ரவுண்டர் இயக்குனரான டி ராஜேந்தருக்கு சிம்பு , குறளரசன் இலக்கியா என மூன்று பிள்ளைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே அதில் சிம்பு தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தம்பி குறளரசன் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். சிம்புவிற்கு இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார்.  தங்கையை சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றே. 
  
அதனை வெளிப்படுத்தும் வகையில் சமீபத்தில் கூட விஜய் டிவி யில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிம்பு சென்றிருந்தார். அப்போது தனது வாழ்வில் நடந்த பல சோகமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட சிம்பு. ரசிகர்களுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்றால் எனது தங்கை இலக்கியாவும் அவரது  மகனும் தான் என்று மிகவும் உணர்ச்சிகரமாக தெரிவித்திருந்தார். 
 

 
இந்நிலையில் சமீபத்தில் சிம்பு தனது தங்கை இலக்கியா மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இந்த புகைப்படம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.  ஆனால் இந்த புகைப்படத்தில் இருப்பது சிம்புவின் சகோதரி மகனா என்பது தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் படத்தில் மணிகண்டன்.. ‘வடசென்னை 2’ பற்றி பரவும் வதந்தி!

ராஜமௌலி படத்தில் இணைந்த பிரித்விராஜ்… துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments