Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்புவோடு இணைந்த பாரதிராஜா – மறுபடியும் வில்லன் வேடமா ?

சிம்புவோடு இணைந்த பாரதிராஜா – மறுபடியும் வில்லன் வேடமா ?
, வியாழன், 30 மே 2019 (09:21 IST)
சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் மாநாடு படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் சிம்பு 'வந்தா ராஜாவாகத்தான் வருவேன்' படத்திற்கு பிறகு மாநாடு என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். எடிட்டராக பிரவீன் கே.எல். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயினாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப்படம் கடந்த பிப்ரவரி மாதம் சிம்புவின் பிறந்தநாள் அன்றே ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் உடல் எடையைக் குறைக்க சிம்பு வெளிநாட்டுக்கு சென்றதால் தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வந்த சிம்பு உடனடியாக ஹன்சிகா நடிக்கும் படத்தில் நடித்து வருவதால் ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

அரசியல் படமான இதில் வில்லன் கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை வெங்கட் பிரபு மறுத்தார். இந்நிலையில் இப்போது அந்த கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதியளித்துள்ளார். ஆனால் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேசமணி மட்டும் மஞ்சள் டர்பன் அணிந்திருந்தால் – ஹர்பஜன் சிங் கலக்கல் ட்வீட் !