Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய தோற்றத்தில் சிம்பு..வைரலாகும் புகைப்படம்

Advertiesment
புதிய தோற்றத்தில் சிம்பு..வைரலாகும் புகைப்படம்
, வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (17:29 IST)
நடிகர் சிம்புவின் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தபடத்தின் பர்ஸ்ட் லுக் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு என்ற படத்திற்காக நடிகர் சிம்பு தனது உடல் எடையைக் குறைத்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவிற்கு அவர் எடையைக் குறைத்து நடிக்கவுள்ளதால், அவரை அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

உடலை வருத்தி சிம்பு இப்படத்தில் நடிக்கவுள்ளதால் நிச்சயம் அவரது நடிப்பிற்கு தேசிய விருதுகள் கிடைக்கும் என அவரது ரசிகர்கள் கூறி அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த இடத்தில ஷூட்டிங்கா? ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து அலறி அடித்து ஓடிய நடிகை!