Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 13 January 2025
webdunia

இந்தப் படத்தில் நான் அழுது நடித்தேன் - நடிகர் சிம்பு உருக்கம் !

Advertiesment
இந்தப் படத்தில் நான் அழுது நடித்தேன் - நடிகர் சிம்பு உருக்கம் !
, திங்கள், 21 ஜூன் 2021 (22:14 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
 
இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கில் #Meherezylaa என்ற பாடலின் டீசரை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்யிருந்த நிலையில் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று யுட் ரெக்கார்ட்ஸ் என்ற யூடியூப் தளத்தில் வெளியாகி இணையதளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில், நடிகர் சிம்பு இன்று சமூகவலைதளத்தில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அப்போது அவர் மனம்விட்டுப் பேசினார். அதில்,  மன்மதன் படத்திற்குப் பிறகு மாநாடு  படத்தில்தான்  அழுது நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தான் மது அருந்துவதை விட்டு  ஓராண்டு ஆவதாகவும் கூறியுள்ளார்.
 
சில ஆண்டுகளாக உடல் எடை அதிகரித்த சிம்பு பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தில் ஸ்லிமாகக் காட்சியளித்தார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் ’பீஸ்ட் ‘2 வது லுக் போஸ்டர்…