Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி தேவசேனாவாக மாறிய ஷெரின்... அட அழகா தான் இருக்காங்கப்பா!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:52 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.
 
அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனுஷின் முதல் படமான இதில் ஷெரின், அபிநய், ரமேஷ் கண்ணா, தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தாலும் அவரை பிரபலப்படுத்தியது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரினிக்கு அழகு கூடிக்கொண்டே போகிறது. ஆம், பிக்பாஸில் இருந்ததைவிட தற்போது உடல் எடை குறைத்து ஒல்லிகுச்சி அழகியாக மாறி அனைவரையும் வசீகரித்து வருகிறார். தற்போது பாகுபலி தேவசேனா கெட்டப்பில் அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை வெகுவாய் ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல்.. ’கோட்’ வசூலை முறியடிக்குமா தேவாரா?

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "மெட்ராஸ் மாஃபியா கம்பெனி"

ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம்!!

"அப்பு VI STD" திரை விமர்சனம்!

ரசிகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றி சொன்ன ரஜினிகாந்த்: வைரல் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments