Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 கடினமான நாட்கள்… ஒமிக்ரான் தொற்றில் இருந்து மீண்ட நடிகர்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:41 IST)
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்தியா முழுவதும் ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் தொற்று அதிகளவில் பரவில் மூன்றாம் அலை கிட்டத்தட்ட உருவாகியுள்ளது. இதனால் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் பல்வேறு பிரபலங்களும் சினிமா கலைஞர்களும் இந்த தொற்றுக்கு தப்பவில்லை. தமிழின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை ஜனவரி 10 ஆம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில் இப்போது 10 நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் தான் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதை அறிவித்துள்ளார். அதில் ‘இறுதியாக கோவிட்டில் இருந்து வெளிவந்துவிட்டேன். நான் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டேன். சாதாரணமாக இல்லை. 10 கடினமாக நாட்கள். இன்னும் உடலில் சோர்வு இருக்கிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. ’ என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் பாட்டு கம்போஸ் பண்ணும்போதே தோனிக்கும்… அனிருத் பகிர்ந்த சுவையான தகவல்!

ரஜினி சார் உதவின்னு கேட்கும்போது எப்படி பண்ணாம இருக்க முடியும்- மோகன்லால் நெகிழ்ச்சி!

விஜய்யின் ஜனநாயகன் படத்தோடு போட்டி போடும் பராசக்தி! - தயாரிப்பாளர் அறிவிப்பு!

நடிகர், கராத்தே மாஸ்டர் ஹூசைனி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

கலக்குறீங்க ப்ரோ.. ‘டிராகன்’ படக்குழுவினரை சந்தித்த விஜய் வாழ்த்து..!4o

அடுத்த கட்டுரையில்
Show comments