Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பதான் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்… இணையத்தில் வைரல்!

Advertiesment
பதான் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்… இணையத்தில் வைரல்!
, வியாழன், 22 டிசம்பர் 2022 (15:09 IST)
தீபிகா படுகோனே ஷாருக்கானுடன் நடித்த படம் ‘பதான். இந்த திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் ரிலீசானது. இந்த பாடலில் அவர் காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து நடனம் ஆடியதை அடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.  தீபிகாவுக்கு கனடனம் தெரிவித்து பாஜக மற்றும் இந்துத்வா ஆதரவாளர்கள் பதான் படத்தை பாய்காட் செய்வோம் என ஹேஷ்டேக் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த சர்ச்சைப் பற்றி கொல்கத்தாவில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய ஷாருக் கான் “நம் காலம் சமூகவலைதளங்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  சமூகவலைதளங்கள் கீழ்த்தரமான குறுகிய பார்வை கொண்டுள்ளன.  இதுபோன்ற செயல்கள் சினிமாவை அழிவுக்குக் கொண்டுசெல்லும். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், நானும் இந்த உலகில் உள்ள மற்ற நேர்மையாளர்களும் உயிரோடு இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார். 

இதையடுத்து இப்போது படத்தின் இரண்டாவது பாடலான ஜூமே ஜூ பதான் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் அதிரடியான துள்ளலிசை பாடலாக அமைந்துள்ளது. ஷாருக் கான் மற்றும் திபிகா படுகோனின் அட்டகாசமாக நடனத்தோடு அமைந்துள்ள இந்த பாடல் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் எஸ்.வி சேகர். மருத்துவமனையில் அனுமதி !