Publish Date: Tue, 20 Dec 2022 (14:39 IST)
Updated Date: Tue, 20 Dec 2022 (14:53 IST)
சமீபத்தில் நடந்த ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிந்துள்ளது.
போட்டி ஆரம்பித்த ஒன்றரை நாளிலேயே 34 விக்கெட்கள் விழுந்து காபா டெஸ்ட் முடிந்தது. இந்த போட்டியில் பந்துகள் பவுன்ஸ் ஆகி ஆகி வந்தன. இதுபற்றி பேசியுள்ள தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் “மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தாக உள்ளது என நான் கள நடுவர்களிடம் புகார் செய்தேன்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானமும் சுத்தமாக பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டுகளை சந்தித்து அபராதப் புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.