சன் லைஃப் தொலைக்காட்சியில் மாடல் அழகிகள் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சியான சொப்பன சுந்தரி சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் இந்த வார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேளடி கண்மணி என்கிற சீரியல் கதாநாயகனாக நடித்துவரும் நடிகர் அர்னவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பார்வதி நாயரை பார்த்து எனக்கு தமிழ் சினிமாவில் இரண்டு நடிகைகளை மிகவும் பிடிக்கும் அதில் ஒன்று நீங்கள், இனொருவர் ஹன்சிகா என்று கூறி சட்டென்று மேடையிலேயே நடிகை பார்வதி நாயரை ப்ரொபோஸ் செய்துள்ளார்.
அதை பார்த்த நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரசன்னா செய்வதறியாது ஒரு நிமிடம் திகைத்து நின்றார்.
இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
https://twitter.com/SunLifeTamil/status/1063408845144424448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1063408845144424448&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F162074