Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியங்கா திருமணத்திற்கு தயாரானது ராஜஸ்தான் ஜோத்பூர் அரண்மனை

Advertiesment
பிரியங்கா திருமணத்திற்கு தயாரானது ராஜஸ்தான் ஜோத்பூர் அரண்மனை
, சனி, 17 நவம்பர் 2018 (10:15 IST)
முன்னால் உலக அழகி பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்கா பாடகர்  நிக் ஜோன்ஸ் திருமணத்திற்காக ஜோத்பூர் அரண்மனை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
 
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படம் மூலம் திரைத்துறையில் கால் பதித்தவர் ப்ரியங்கா சோப்ரா. அதை தொடர்ந்து பாலிவுட் சென்ற அவர், அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார். 
 
புகழின் உச்சியில் இருந்த போதே, ஹாலிவிட் திரையுலகிலும் அவர் கால்பதித்தார். ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்கா தொலைக்காட்சி தொடரில் நடித்த ப்ரியாங்காவுக்கு, ஹாலிவுட் திரையுலகம் சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தது. 
 
மீண்டும் இந்திய படங்களில் நடிக்கத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க படங்களில் அவர் பிஸியானார். அப்போதுதான் ப்ரியங்கா 25 வயதே ஆன இளம் பாடகர் நிக் ஜோன்ஸ் உடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. 
 
அதை உறுதிப்படுத்தும் விதமாக, மும்பையில் ப்ரியங்கா மற்றும் நிக் ஜோன்ஸுக்கு திருமண நிச்சியதார்த்தம் நடைபெற்றது. 25 வயதான நிக் ஜோன்ஸை 33 வயதான ப்ரியங்கா சோப்ரா திருமணம் செய்யவுள்ளது இந்தி திரைவுலகினரிடையே பரபரப்பை கிளப்பியது. 
 
இந்நிலையில் வரும் டிசம்பர் 1ம் தேதி ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் திருமணம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரபல ஜோத்பூர் அரண்மனையில் நடைபெறவுள்ளது. 
 
அதற்காக  ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. தற்போது அதுகுறித்து புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படங்களை பார்த்தாலே அசந்து போகும் அளவுக்கு பிரமாண்டமாக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம அரசகுலம் முறைப்படி நடக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும், இந்திய பாரம்பரியத்தை மறக்காது ராஜஸ்தானில் திருமணம் செய்து கொள்ளவுள்ள ப்ரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸிற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோதிகாவின் சம்பளம் இத்தனை கோடியா? டாப் ஹீரோயின்களே அதிர்ச்சி!!