Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் திரையுலகில் அற்புதங்களை நிகழ்த்தியவர் எஸ்.பி.பி - சிம்பு உருக்கம்

Advertiesment
தமிழ் திரையுலகில் அற்புதங்களை நிகழ்த்தியவர் எஸ்.பி.பி -  சிம்பு  உருக்கம்
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (20:01 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை ஆரம்பத்தில் தேறி வந்தாலும் திடீரென அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு வெண்டிலட்டர் மற்றும் எக்கோ கருவியின் உதவியுடன் மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழுவும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என கோடிக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வரும் நிலையிலும் அவர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்நிலையில் நடிகர் சிம்பு, எஸ்.பி.,பி குறித்து கூறியுள்ளதாவது :

தமிழ் திரையுலகில் அற்புதங்களை நிகழ்த்தியவர் எஸ்.பி.பி இனிமையை நாம் உணர எஸ்.பி.பியின் பாடல்களைக்  கேட்டாலே போதும்.  நாளை மாலை 6 மணிக்கு எஸ்.பி.பியின் பாடலை ஒலிக்கச் செய்து அவருக்காக பிரார்த்திப்போம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரமாண்ட படத்தில் பாகுபலி ஹீரோவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?