Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப்பலில் நடனமாடிய சயீஷா... என்ன ஒரு ஆனந்தம் இந்த பொண்ணுக்கு!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (15:16 IST)
கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து தற்போது ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் பா.இரஞ்சித் இயக்கும் "சல்பேட்டா" என்ற படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். இதற்கிடையில்  இந்த கொரோனா லாக்டவுன் சமயத்தில் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் பிரபலங்களுக்குள் காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆம், சயீஷா அடிக்கடி ஆர்யாவுடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதையடுத்து சயீஷா கர்ப்பமாக இருப்பதாக வதந்தி ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது.  இந்நிலையில் செந்தில் - ராஜலட்சுமியின் ஹிட் பாடலான  "சின்ன மச்சான்" பாடலுக்கு  நடுக்கடலில் கப்பலில் நடனமாடிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். எந்த கவலையும் இன்றி குழந்தை போல் மகிழ்ச்சியாக ஆட்டம் போட்டுள்ள சயீஷாவின் நடனம்  இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசரில் இளையராஜா பாட்டு… அடுத்த சர்ச்சையா?

மேடையில் அஞ்சலியத் தள்ளிவிட்டு அநாகரிகமாக நடந்துகொண்ட பாலகிருஷ்ணா… ரசிகர்கள் கண்டனம்!

குடும்பங்கள் கொண்டாடும் ஆன் தி வே… ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்கும் பாண்டிராஜ்!

ரிலீஸ் தேதியை லாக் செய்த சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு!

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments